மலையாளக் கரையோரம்... - PDF to Flipbook
Published on Sep 17, 2026
Description:
*கேரளத்தில் மனதிற்கு இதமான பயணம்*
பகுதி-1
சென்னை மேடவாக்கத்தில் நானும், எனது
துணைவியாரும் மட்டும் உள்ளோம் என்பது
எல்லோரும் அறிந்ததே. மகன் குடும்பம் சிங்கப்பூரிலும்,
மகள் குடும்பம் அயார்லாண்டிலும் உள்ளனர்.
வருடாவருடம் மே மாதம் நாங்கள் சிங்கப்பூர் செல்வது
வழக்கம். ஆனால் இந்த வருடம் (2026) மே மாதம்
பெரும்பாலான நாட்கள் உறவினர் வீட்டு திருமணம்
சென்னை, மதுரை, காரைக்குடியில் இருந்ததாலும்,
நாங்கள் கட்டாயம் அதில் கலந்து கொள்ள
வேண்டியிருந்ததாலும் நாங்கள் சிங்கப்பூர்
செல்லவில்லை.
கடந்த 5 மாதங்களாக பிள்ளைகள் மற்றும் பேர
பிள்ளைகளை பார்க்காமல் போர் அடித்ததாலும்,
வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும் பக்கத்து
மாநிலமான கேரளம் வரை ஜூன் 9,10,11,12 ஆகிய 4
நாட்கள் சென்று வர தீர்மானித்தோம். சென்னை சூளைமேட்டில் அமைந்துள்ள Near Holidays
Travels மூலம் கொச்சி வரை விமானத்தில் சென்று
அங்கிருந்து கார் மூலம் மூணாறு சென்று அங்கு 2
நாட்கள் தங்கி அங்குள்ள இடங்களை சுற்றி பார்த்து
விட்டு, பிறகு ஆழப்புலா (Alleppe) சென்று Boat House யில்
தங்கி சுற்றி பார்த்து விட்டு, நான்காவது நாள் கொச்சியில்
முக்கியமான இடங்களை சுற்றி பார்த்து விட்டு
மீண்டும் கொச்சியில் இருந்து விமானம் மூலம்
சென்னை வந்து சேருமாறு புக் பண்ணினோம்.*கேரளத்தில் மனதிற்கு இதமான பயணம்*
பகுதி-2
முதல் நாள் 9.6.2026. காலை 8 மணிக்கு புறப்படும் Flight
6E 5394 யில் (Indigo) கொச்சிக்கு புக் செய்திருந்ததால்
காலையில் 5 மணிக்கு எழுந்து குளித்து பிரார்த்தனை
செய்து விட்டு எங்களது காரில் 6 மணிக்கு ஏற்போர்டிற்கு
புறப்பட்டோம். நேராக சென்னை உள்நாட்டு விமான நிலையம் சென்று Check in முடித்து Boarding Pass பெற்று
கொண்டோம்.
இருக்கை எண்கள் 37 ட,37 E. பின்னர் Security Check
முடித்து கொண்டு Gate No 1 யில் காத்திருந்தோம். Airport
யில் உள்ள Idly.com என்ற ஓட்டலில் எனக்கு 2
இட்லி,1வடை, மனைவிக்கு ஒரு தோசையும் வாங்கி
சாப்பிட்டோம். காபி ஒன்று வாங்கி மனைவி மட்டும்
குடித்தாள்.
இட்லி, தோசை, வடை, காபி விலையை கேட்டால்
வியப்பை அளிக்கும். இது எல்லோருக்கும் தெரிந்தது
தானே. இதை வேறு எங்களிடம் சொல்ல வேண்டுமா?
என்று தங்கள் உள் மனது ( Mind Voice) கேட்பது
நன்றாகவே எனது காதில் விழுகிறது.
காலை 7.30 மணிக்கு விமானத்தில் ஏறி கொச்சிக்கு
பறக்க தயார் ஆனோம். பறக்கும் நேரம் ஒரு மணி நேரம்.
விமானம், மேகங்கள் இடையே பாய்ந்து சென்றதை
சன்னல் வழியே பார்த்து மகிழ்ந்தோம். சரியாக 9 மணி
அளவில் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தோம்.
இது ஒரு பன்னாட்டு விமான நிலையம். This Airport is
Solely Powered by Solar Panel. இது தான் இந்த விமான
நிலையத்தின் சிறப்பு. எங்களது 2 Suit Cases யை Belt 1
யில் இருந்து எடுத்து கொண்டு வெளியே வந்தோம்.
Travels மூலம் அமர்த்தப்பட்ட கார் டிரைவர் Mr. Habib
எங்களை தொடர்பு கொண்டு Pillar 1 க்கு எங்களை வர
சொன்னார். இங்கு ஒரு நகை சுவை சம்பவம் நடந்தது.WhatsApp யில் எனது DP யில் எனது மகள், மருமகன்,
குழந்தைகள் இருந்த புகைப்படத்தை அப்போது
வைத்திருந்தேன். டிரைவர் உயரமான எனது மருமகனை
'Xavier ' என்று எண்ணி காத்திருந்தார்.
நான் தொலைபேசியில் பேசிக்கொண்டே பக்கத்தில்
சென்று நான் தான் ' Xavier' என்று அவருக்கு என்னை
அறிமுகப்படுத்தி கொண்டேன். அவர் நம்பவில்லை.
DP யில் உள்ளது எனது மருமகன் என்று விளக்கம்
கொடுத்து விட்டு காரில் ஏறினோம்.
இருந்தும் காரில் ஏறி அமர்ந்ததும், எனது
தொலைபேசிக்கு மீண்டும் டிரைவர் போன் செய்து நான்
தான் Xavier என்பதை உறுதிப்படுத்தி கொண்டார்.
நானும் அவரிடம் எனது ஆதார் கார்டையும் காட்டி
அவரது சந்தேகத்தை முழுவதும் தீர்த்து வைத்தேன்.
அவரும் என்னிடம் இதற்காக Sorry சொன்னார்.
நாங்கள் காரில் ஏறியதும் கனமான மழை "சோவென்று "
கொட்டி எங்களை வரவேற்றது. மூணாறு காரில் செல்ல
4 மணி நேரம் ஆகும் என்றார். மழை வேறு வெளுத்து
வாங்கியது. எனவே மழைக்கு டீயும், சூடான Somasa வும்
சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என எண்ணி
டிரைவரிடம் தெரிவித்தேன்.
ஒரு Tea Shop யில் இறங்கி Tea ம், Samosa வும் சாப்பிட்டு
மகிழ்ந்தோம்.அங்கிருந்து பசுமையான மரம், செடி,
கொடிகளை பார்த்து கொண்டே பயணம் செய்தோம். அங்கிருந்து 83 கிலோ மீட்டரில் 'Cheeyappara Falls'
அமைந்துள்ளது.2.15 மணி நேரம் கார் பயணத்திற்கு
பிறகு அந்த நீர்வீழ்ச்சியை வந்து சேர்ந்தோம்.
அந்த நீர்வீழ்ச்சியில் குளிக்க இயலாது. மலை உச்சியில்
இருந்து நீர் வீழ்ச்சி வேகமாக சிதறி விழுகிறது. நாங்கள் சென்ற சமயம் மழை கொட்டியதாலும், கூட்டம் வேறு
இருந்ததாலும் அதன் அழகை நின்று பார்த்து ரசிக்க
இயலவில்லை. அவசரம், அவசரமாக நின்று
புகைப்படம் மட்டும் எடுத்து கொண்டோம்.
மலை மீது மழை பொலிவுடன் நாங்கள் பயணம் செய்த
கார் மிதந்து வந்தது. மதியம் 1 மணி அளவில் 'RASA
MUNNAR ' என்ற ஓட்டலில் எங்களது காரை நிறுத்திய
டிரைவர் இந்த ஓட்டலில் 'Food Items ' நன்றாக இருக்கும்
என சொல்லி சாப்பிட்டு விட்டு வர சொன்னார். காலை
6.30 மணிக்கு ஏர்போர்ட்டில் சாப்பிட்டது. அதனால் பசி
வயிற்றை கிள்ளியது. அதனால் Chicken Soup, Parotta,
Mutton Biriyani,, Butter Chicken ஆர்டர் செய்தோம்.
கேரளத்தில் Biriyani வெள்ளை நிறத்தில் தான் உள்ளது.
நாங்கள் திருப்தியாக சாப்பிட்டு மகிழ்ந்தோம்.
பின்னர் அங்கிருந்த மூலிகை தோட்டத்தை சுற்றி
பார்த்தோம்.சீரகம், சோம்பு, கிராம்பு, மிளகு, பட்டை,
ஏலக்காய் என அனைத்து விதமான மரங்கள், செடிகளை
பார்த்தோம். மேலும் வீட்டுக்கு தேவையான மசாலா
பொருட்கள் வாங்கி கொண்டோம்.
பெண்கள் எத்தனை வயதானாலும் புது இடத்திற்கு
சென்றால் தனக்கென்று புடவையோ, சுடிதாரோ எடுத்து
கொள்வது வழக்கம்.உங்களுக்கு ஏதும் வேண்டுமா?
என்று கேட்க மாட்டார்கள். எனது துணைவியாரும்
அதில் விதி விலக்கல்ல. எனவே அங்கு ஒரு புடவை
எடுத்து கொண்டார்.
அதன் பின் கார் டிரைவரின் ஆலோசனைபடி மாலை 5
மணி முதல் 6 மணி வரை 'கத களி ' நடனம்,6 முதல் 7 மணி வரை 'களரி யுத்தம் ' என்ற வகையில் இருவருக்கும்
₹1000*2=2000/ புக் செய்து விட்டு, நாங்கள் புக்
செய்திருந்த 'Misty Dale' என்ற ஓட்டலுக்கு சென்றோம்.
போனதும் கீழே முதல் தளத்தில் அமைந்திருந்த எங்கள்
Room க்கு சென்றோம். அவர்கள் கொடுத்த Welcome Drinks
அருந்தினோம். ஏற்கனவே மாலை 4.15 மணி ஆகி
விட்டதால் விரைந்து குளித்து Refresh செய்து
கொண்டோம்.
அங்கிருந்து "Punarjani Traditional Village Anachal ' என்ற
Auditorium க்கு காரில் சென்றோம். 'கதகளி நடனம் '
நாங்கள் இது வரை பார்த்தது இல்லை. எனவே அதை
பார்த்து ரசித்து மகிழ்ந்தோம். அதில் 'சீதா கல்யாணம் மற்றும் கிருஷ்ண லீலைகள்
நாட்டிய நடனம் மிக அருமையாக இருந்தது.
அடுத்து 'களரி யுத்தம் ' மிகுந்த பிரமிப்பை அளித்தது.
அந்த சண்டைகளை பார்க்கும் போது அனைவரும்
சீட்டின் நுனியில் அமர்ந்து திகிலுடன் பார்த்தோம்.
அவர்கள் எரியும் கத்தி எங்கே நம் மீது விழுந்து
விடுமோ? என்ற பயத்துடன் பார்த்தோம். அது
முடிந்ததும் நாட்டிய நங்கைகளுடன் சேர்ந்து
புகைப்படம் எடுத்து கொண்டோம்.
மூணாறு மலை பிரதேசம் என்பதால் ஓட்டல்கள் இரவு 8
மணிக்கே மூடி விடுகிறது.
அதனால் Programme முடிந்ததும் காரில் ஓட்டல்களை
தேடி சென்று கடைசியில் ஒரு ஓட்டலில் ஆளுக்கு 2
தோசைகள் சாப்பிட்டு விட்டு இரவில் மூணாறு டவுனை
சுற்றி பார்த்து விட்டு இரவு 10 மணிக்கு ஓட்டலுக்கு
வந்து சேர்ந்தோம்.
இரவு அதிக குளிராக இருந்ததால் சீக்கிரம் படுத்து
விட்டோம். மூணாறு ட்ரிப்பின் முதல் நாள்
இனிமையாக கழிந்தது.